சுவாரசிம்


ஜப்பானில் விஞ்ஞானிகளால் புதிய கண்டு பிடிப்பு  நனோ தொழிநுற்பம் மூலம் இரத்தத்தை  உடனே உறைய வைக்கும் புதிய மருந்து...!



விபத்துக்களில் காயம் அடைந்தவர்கள்  மரணத்துக்கு அதிகமான ரத்த போக்கே காரணமாக அமைந்து விடுகின்றது எனலாம்  இரத்த போக்கை நிறுத்தி விட்டால் உயிரிழப்புகளை நிறுத்தி விடலாம். இதன் நோக்கில் ஜப்பானிய விஞ்ஞானிகள்  புதிய மருந்து ஒன்றினை கண்டு பிடித்துள்ளனர்


ஜப்பானில் உள்ள தேசிய இராணுவ மருத்துவ கல்லுாரி  ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வொண்ரை நடத்தினார்கள் இதில் நனோ  தொழிநுற்பம் மூலம் இரத்தத்தை உடனடியாக உறைய வைக்கும் மருந்தை கண்டு பிடித்தனர் அந்த மருந்தில் கண்ணுக்கு தெரியாத தொழிநுாற்பமான பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை உடலில் செலுத்தியதும் இரத்தநாளத்தில் சேதமடைந்த பகுதிகளை அடைத்துக் கொள்ளும்   இதன் மூலம் இரத்த கசிவு  உடனடியாக தடுக்கப்படும்.

தற்போது மருத்துவர்கள் விலங்குகளுக்கு இதனை கொடுத்து பரிசோதித்துள்ளனர்  அதில் மருந்து வெற்றிகரமாக வேலைசெய்துள்ளதாம்  இந்த புதிய மருந்து மூலமாக உலகில் பெரிய அளவில் விபத்து மரணங்களை தடுக்க முடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்




பூமயைப்  போல  ஒரு  கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது









பூமியைப் போல ஒரு கிரகம் அன்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்  இந்த கிரகம் 42 ஔியாண்டு துாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம் super earth எனப்படும் இந்த கிரகம் பூமியிலிருந்து 42 ஔியாண்டு துாரத்திலிருக்கும் HD  40307  எனப் பெயரிடப்பட்ட நட்சத்ததிரம் ஒன்றைச் சுற்றி வலம் வரும் இந்த கிரகம்  பூமியைப் போல தண்ணீர் வசதிகளும் கணப்படுகின்றமை விசேட அம்சமாகும்

இந்த கிரகம் உயிரினங்கள் வசிக்க தக்கதான வசதிகளும் காணப்படுவதாக ஆய்லாலர்கள் கூரியுள்ள அதேவேளை super earth  எனப்படும் இந்த  கிரகத்துடன் இன்னும் இரு தண்ணீர் உடைய கிரகங்களும் இதனை சுற்றி வருவதாக அவர்கள் கூறியள்ளனர்

 இங்கு திரவ நிலையில் தண்ணீர் இருப்பதும் உனரப்பட்டுள்ளது  எனினும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என உறுதிப்படுத்த இன்னும் அவசியமான அவதானிப்புகள் தேவை எனவும் வதானியலாளர்கள் மற்றும் வான் பௌதிகவியலாளர்கள்  (Astrophysiusts)  கூறியுள்ளனர்
 
மெலும் இந்த  கிரகம் சுற்றி வரும் நட்ச்சத்திரமான  HD 40307 நமது சூரியனை விட சிறியது என்பதுடன் ஆரஞ்சு நிற ஔியை வௌிப்படுத்தும் நட்சத்திரமாகும் இந்த நட்சத்திரம் மற்றும் பூமியைப் போல கிரகம்  ஆகியவை சிலியில் உள்ள ஐரோப்பிய விண்ண்ாய்வு கழகத்தின் தெற்கு அவதான நிலையமான சில்லா இருந்து கண்டு பிடிக்கப்பட்டன

HD 40307  நட்சத்திர் மொத்தமாக 6 கோல்களை உள்ளடக்கியது மேலும் இது குறித்த மற்றைய அவதானிப்புகள் விண்ணில் நிறித்தப்பட்டுள்ள அதிக வலுவுள்ள தொலைக்காட்டிகள் மூலம் இந்த பூமி போன்ற கிரகம் எந்த மூலங்களால் ஆக்கபபபட்டுள்ளது என அறிவதில் விஞ்ஞானிகள் ஆர்வாக உள்ளார்களாம்.







பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!






1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

No comments:

Post a Comment