நிகழ்வுகள்




8.11.2013



இலங்கையின் அரசாங்க பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏட்பாட்டில்  நவீன ஊடகங்கள் ஊடாக சிங்கள பாரம்பரிய கலைகளை உலகுக்கு எடுத்து செல்லள் என்ற தொனிபொருளில் ஊடகவியலாளர் மாநாட்டொன்ரை வௌ்ளிக்கிழமை அரசாங்க ஊடக அமைச்சின் மண்டபத்தில் ஏன்பாடு செய்திருந்தது

இவ் ஊடக மாநாட்டில் களனி பல்கலை கழகத்தின் முன்னால் விரிவுரையாளரும் தற்போது ஹவாய் பல்களை கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமை ஆற்றும் விமல் திசாநாயக்க அவர்கள் உரையாற்றினார்

 அவர் அங்கு உரையாற்றுகையில் உலக நாடுகள் பல  மரபார்ந்த தம் நாட்டு கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை நவீன ஊடகங்களுக்குடாக உலகத்திற்கு வௌிச்சம் போட்டு காட்டுகின்றன

 ஆனால் நம் நாட்டை பொறுத்த வரையில் சிங்கள கலாசாம் உலக நாடுகள் பலவற்றிற்கு தெரியாமல் இருப்பது கவளைக்குரியதே என்றும் எதிர் வரும் காலங்களில் சிங்கள பாரம்பரியங்களை உலகுக்கு எடுத்துச் செல்ல நவீன ஊடகங்கள் முனவர வேண்டும் என அவர் மேலும் கூரினார்








7.11.2013



பொதுநல வாய மாநாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்ஙகள் வெடித்தால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்- பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன.....................................

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டுக்காண நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி நடந்துக்கொண்டிருக்கும் இவ்வாரப்பகுதியில் மாநாட்டுக்கு எதிரான கோசங்கள் அல்லது ஒரு தனி நபரின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலான சம்பவங்கள் இடம் பெறுமாயின் அதெற்கு எதிராக சட்ட நடவடிக்ைககள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்

அத்தோடு மாநாட்டின் பாதுகாப்பையொட்டி நாடு முழுவதும் 26000 பொலிஸ் பாதுகாப்பு படையினர் கடமையில்  உள்ளதாகவும் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டுக்கான வாரப்பகுதியில் அரச தலைவர்களின் பாதுகாப்பையும் மக்களின் சுதந்திரத்தையும்,  பாதுகாப்பையும் பாதுகாப்பது  பொலிஸாரின் கடமையாகும் இம்மாநாடு இடம் பெறுகின்ற காலப்பகுதியில் மாத்திரமின்றி ஏனைய காலப்பகுதியிலும் ஒரு தனி மனிதனது சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இடையூருகள் அல்லது ஆர்பாட்டங்கள் இடம் பெறுமாயின் சட்ட நடவடிக்ைககள் எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்

நாரா​ேஹன் பிடியவில் அமைந்துள்ள இலங்கை ஊடக துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில்  வௌ்ளிக் கிழமை இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



















 18 xf];l; 2013 




 நினைவுகள் அழிவதில்லை

திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் எழுதிய நினைவுகள் அழிவதில்லை சிறுகதை நூலுக்கான ஆய்வரங்கு 18 ஒகஸ்ட் 2013ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30க்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் குடத்தில் இடம்பெற்றது.

இந்த ஆய்வரங்கிற்கு தலமையாக திருவாளர் ட. இராசரத்தினர் அவர்களும் நெறிப்படுத்தினராக இலங்கை இதழியள் கல்லுரியின் சிரேஸ்ட விரிவுரையாலரும் ஆய்வாரள்களாக ஜி.கோகிலவாணி ஐ.வினோதன்  மற்றும் திருமதி ரிம்ஸா முஹமத் டி.நிரோஷா ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர்.









































2013 ஆம் வருடத்திற்கான ஆடிமகோற்சவத்தை முன்னிட்டு  2013/08/10 ஆம்
 திகதி வௌ்ளவத்தை ஶ்ரீ மயுரா பத்ரகாளியம்மனின் தேர்த்தோற்சவ நிகழ்வு இடம்பெறறது.


























இலங்கையில் தாய்பால் ஊட்டலை 99.9+ சதவீதமாக உயர்த்த வேண்டும் என்கிறார்-பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க.


இலங்கையில் தாய்பால் ஊட்டளை 99.9+ சதவீதமாக உயர்த்த வேண்டும் என பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார் நேற்று புதன் கிழமை சுகாதார அமைச்சும் இலங்கை சுகாதார கல்வி பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டலின் அவசியத்தை மக்களுக்கு விழிப்புணர் ஊட்டும் ஊடக மகாநாட்டிலேயே கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.




அவர் தொர்ந்தும் உரையாற்றுகையில் உலக நாடுகளில் குழந்தைகளுக்கு தாய் பால் ஊட்டல் சதவீதத்தினை 100க்கு 20சதவீதமாக உயர்துவதற்கு இவ்வருடமுதல் திட்டமிடப்பட்டிருப்பதாக Unicef நிறுவனத்தின் அறிக்கைகள் தெரிவிக்கன்றன அந்தவகையில் ஆசியாவில் இலங்கை 90 சதவீதத்தினால் வளர்ச்சி அடைந்துள்ளது இவ் எண்ணிக்கையினை 99.9+ சதவீதமாக உயர்த வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றோம். தோட்டப்புறங்களில் இம்மட்டம் 87 சதவீதமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது எனவே தாய்மார்கள் தமது குழந்தைகளின் ஆரோக்ககியத்தை கருத்திற் கொண்டு தாய்பால் கொடுத்தலுடன் அக்கரையுடனும் பொறுப்புடனும் செயற்படுவது அவசியம் எனக் கூரினார்.



இந்நிகழ்வில் சுகாதார கல்வி பணியகத்தின் குடும்ப நல மருத்துவ ஆலோசகர் உரையாற்றுகையில் தாய்மார்கள் தமது குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு  செயற்படுவது அவசியம் ஒரு குழந்தைக்கு 2 வருடங்களுக்கு குறையாது தாய்பால் ஊட்டல் அவசியம் ஆகக் குறைந்தது 6 மாத காலமாவது தாய்பால் ஊட்டுவது அவசியமாகிறது

 ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு DHA மூலக்கூறு மிகவும் அவசியம் அவை தாய்ப்பாலில் அதிகமாக காணப்படுகிறது எனறும் ஒரு ஆரோக்கியமான குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் அவசியமன்று அத்தோடு ஒரு தாய் தன் குழந்தைக்கு ஆரோக்யமான பாலுட்டளை வழங்க வேண்டும் என்றால் கும்பத்தாரின் கவணிப்புகளும் ஒத்துளைப்புகளும் ஒரு தாய்க்கு அவசியமாகிறது எனக் கூறினார். மேலும் இம்மநாட்டிற்கு அரச மற்றும் தனியார் ஊடகங்கள் கலந்துக்கொண்டதும் குறிப்பிட தக்கது.




















































பாடிப்பறை   தேசிய கலை இலக்கிய பேரவை 121 லேன் வெள்ளவத்தை.






தேசிய கலை இலக்கிய பேரவை 121 லேன் வெள்ளவத்தை

சமூக விஞ்ஞான கற்றை வட்டம் வீதிகளில் பெண்கள் மீது நிகழும் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்ளுதலும் அதனை  இல்லாதொழித்தலும் என்ற தலைப்பில் நேற்று சனிக்கிழமை கலந்துரையாடலொன்றை மேற்க்கொண்டது.

சமூக விஞ்ஞான வட்டம் வாரா வாரம் பல விடயப்பரப்புகளில் கலந்துலையாடல்களை மேற்கொண்டு வருகின்றது

29-06-2013 நேற்று சனிக்கிழமை வீதிகளில் பெண்கள் மீது நிகழும் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்ளுதலும் இல்லாதொழித்தலும் என்ற தலைப்பபில் ஆய்வினை மேற்க்கொண்டது இந் நிகழ்வு நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.30 மணியளவில் நிறைவு பெற்றது இந் நிகழ்வுக்கு இலங்கை இதழியல் கல்லுரியின் சிறேஸ்ட விரிவுரையாளர் திருமதி என்.எஸ்.தேவகௌரி அவர்களும் சமூக ஆய்வாளர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

பெண்கள் ஆண்களுக்கு அதே சுதந்திரத்துடன் வௌியில் நடமாடுவதற்கு தடையாக அமையும் காரணங்களுள் ஒன்று வீதிகளில் ஆண்களால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் தொந்தரவாகும் இவ்வாரான தொந்தரவினைச் செய்யும் மனநிலை ஆண்களுக்கு எவ்வாறு ஏற்படுகிறது? இதற்க்கான சமூக உளவியல் அடிப்படைகள் எவை? இவ்வாரான தொந்தரவுகளை உடனுக்குடன் சட்டரீதியாகவும் பெண்கள் எவ்வாறு எதிர்கொள்ளலாம்? இவ்வாரான தொந்தரவுகளை முற்றிலும் இல்லாதொழிப்பது எவ்வாறு? என பேசப்பட்டது.  இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.  

இந்நிகழ்வோடு தொடர்புடைய படங்களை பார்கலாம்.










.



No comments:

Post a Comment