Tuesday 14 January 2014

கிளாரினெட்

கிளாரினெட்


படத்தில் நாம் காணும் இந்த இசை கருவி ஒரு மேற்கிந்திய இசைக்கருவி வகையை சேர்ந்ததாகும்  இந்த இசைக்கருவியை கருநாடாக இசைக்கும் தற்போது பயன்படுத்தப்படுவதை அவதானிக்கலாம்

இந்த கிளாரிநெட் உலகில் முதல் நாகரீகமான எகிப்திய நாகரீக காலகட்ட்த்தில்
இலையை சுருட்டி குழல் போலாக்கி அக்காலத்தில் ஊதினார்கள் பின்னர்

இந்த கருவியை 12ஆம் நூாற்றாண்டில் பிரான்சில் சாலூசீ என்பவரால் இந்த வாத்திய கருவி  வடிவெடுத்தது எனலாம்

இதன் பின்னரான காலகட்டத்தில் 17ஆம் நூற்றாண்டில் அது மேலும் புதிய வடிவத்தை எடுத்துள்ளது பின்னர் அதில் ஒரு பிரிவாக கிளாரி​னெட் என்னும் இந்த வாத்தியக் கருவி 18ஆம் நூற்றாண்டின்  13 ஆகஸ்ட் மாதம் 1655 இல் ஜேர்மனியில் லைம்சிக் என்னும் இடத்தை சேர்ந்த யொஹான் கிரிஸ்டோப் டென்னர் என்பவரால் கண்டுபிடிக்கப்ட்டுள்ளது.

Sunday 8 December 2013

நீங்கள் தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா...?




நீங்கள் தூங்கும் போது முதலில் தூங்குவது எந்த உறுப்பு என்று தெரியுமா...?

நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்க ஆரம்பிக்காது.

முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்
உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக்கள், காது,
இறுதியாக தோல் ஆகியவை தூங்கும்.

ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக
நிகழும். முதலில் தோல் தன் வேலையை ஆரம்பிக்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.

Tuesday 26 November 2013

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஆரம்ப தலைவரான திருவாளர் தவக்குமார் அவர்களிடம் கண்ட செவ்வியின் போது...


மலை முகடுகளில் முடங்கிப்போன உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் முகமாக மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் தனது எட்டாவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. இதனது செயற்பாடுகளும் மலையகத்தில் பரந்து விரிந்தனவாக ஏழ்மையான இளந்தளிர் இதயங்களின் இதயமூச்சாக அவர்களின் கல்விக் கண்னை திறந்திருக்கின்ற மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் தனது வளர்ச்சியின் வரலாற்றையும் அது கொண்ட பாதையின் கண்ட சவால்களையும் மன்றத்தின் ஆரம்பத் தலைவராக செயற்பட்ட திருவாளர் தவக்குமாரிடம் கண்ட செவ்வியின் போது  நான் தொடுத்த வினாக்களுக்கு என்னோடு பகிர்ந்துக் கொண்ட சில  விடயங்கள்……

கேள்வி:-  மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஆரம்பத் தலைவர் என்ற ரீதியில் மன்றம் உருவானது எப்படி அது ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு அதனது பின் புலம் எவ்வாறு இருந்தது என்று சற்று விளக்கமாக சொல்ல முடியுமா?
          
பதில்:-  நிச்சயமாக! மலையகத்தை சேர்ந்த இளைஞர்கள் கொழும்புக்கு பெரும்பாலும் வேலைத்தேடி வருவதற்கான காரணம் அவர்களது கல்வியை தொடர முடியாத சுழ்நிலை காரணமாகவே. அவ்வாறு கல்வியை இடைநிறுத்தி விட்டு கொழும்பிற்கு வேலைதேடி வந்தவர்களில் நானும் ஒருவன். வீட்டு வறுமை காரணமாக இந்த செட்டியார் தெருவில் வேலைக்காக வந்திருந்த இளைஞர்கள் அதிகமாக இருந்தனர். அவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகுவதற்கு காரணம்  கற்றலுக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலைமையே ஆகும்.

அவர்களுக்கு கற்றல் உபகரணங்களைக் கூட பெற்றுக் கொடுப்பதற்கு யாரும் முன்வர வில்லை. இதன் காரணமாக கொழும்பிறகு வேலைக்கு வர  நேர்ந்தது. அப்போது தான் எங்களுடைய நண்பர்கள் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்தோம் அதாவது நாங்கள் தான் அவ்வாறு வறுமைக்காரணமாக கல்வியை இடைநிறுத்தி விட்டு வந்து விட்டோம்  நாங்கள் எங்களுடைய இனிவருகின்ற சந்ததியை பற்றி சிந்தித்தோம் அவ்வாறு சிந்தித்ததன் விளைவுதான் இந்த மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் என்ற இந்த அமைப்பு.  இது பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்கள் தங்களது வறுமையின் காரணமாக பாடசாலை இடைவிழகல் என்பது இருக்க கூடாது என்பதற்காக சிந்தித்தோம் அவ்வாறு ஒரு நாள் நானும் எங்களுடைய நண்பர்கள் எல்லாம் மைதானத்தில் கிரிகட் விளையாடிக் கொண்டிருந்தபோது இதைப்பற்றி கதைத்துக் கொண்டோம் அங்கு தான் மன்றத்துக்கான கரு உருவானது எனலாம்.
             
அங்கு கதைத்து கொண்டிருந்த சந்தர்பத்தில் தான் ஒரு தீர்மாணத்தை எடுக்க கூடியாக இருந்தது அதுதான் ஒரு மன்றத்தை உருவாக்குவோம் காரணம் செட்டியர் தெருவில் அதிகமான முதழாலிகளும் இளைஞர்களும் இருக்கின்றார்கள் அவர்கள் அனைவருமே மலையகத்தை சேர்ந்தவர்கள்தான் எனவேதான்  அவர்களிடமிருந்து ஒரு அளவிலான நிதியை வசுளிப்பதன் ஊடாக மலையகத்திலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற  இளைஞர்களின் கல்விக்காக உதவலாம் என நினைத்தோம். அதே போல உதவும் என்னங்களை கொண்ட இளைஞர்களையெல்லாம் ஒன்று சேர்த்தோம் அதாவது இளைஞர்களைமட்டும் ஒன்றுசேர்தால் போதாது இங்குள்ள முதழாலிமார்களையும் இணைத்துக் கொண்டோம். இங்கு நல்ல மனதுள்ள பொருளாதார வசதி கொண்ட முதழாலிகள் இருந்தார்கள் ஆனால் அவர்களுக்கு மற்றவர்களுக்கு எவ்வாறு  உதவுவது என்ற வழிதெரியாமல் இருந்தார்கள்

அப்படியானவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து அவர்களிடம் நாங்கள் சென்று இவ்வாறு நாங்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி மலையக கல்விக்காக உதவலாம் என நினைக்கின்றோம்  என்றவுடன் எங்கள் அமைப்புக்கு பலர் உதவுதற்கு முன்வந்தார்க்ள் குறிப்பாக எங்களுடைய போசகர்கள் இன்றும் மன்றம் வளர்ந்த பின்பும் அவர்கள் எங்களுக்கு இன்னும் உதவி செய்து கொண்டு இருக்கின்றார்கள் அவ்வாறான கொள்கைகளை கொண்ட இளைஞர்கள் முதழாலிகளுக்கு மலையக கல்வி மற்றும் அங்கு இருக்கின்ற மாணவர்க்ள் பற்றி விளக்கி கூறினோம் அதாவது எங்களுடைய சமூகம் வளர வேண்டும் என்றால் கல்வியில் உயர வேண்டும் அந்த கல்வியை பூரணமாக பெருவதற்கு வறுமையான குடும்பங்களுக்கு  உதவ வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என திட்டங்களை வகுத்தோம். அவ்வாறு நாங்கள் கூடிய முதலாவது கூட்டத்திலே தலைவர். செயலாளர் பேன்றவர்களை நியமித்து பல சவால்களுக்கு மத்தியில் மன்றத்தை ஆரம்பித்தோம் இவ்வாறு மன்றத்தை ஆரம்பித்து விட்டால் போதாது அது இயங்க நிதி வேண்டும் அவ்வாறு பார்த்தால் சாதாரணமாக ஒரு பாடசாலை மாணவனுக்கு உதவுவது என்றால் 1000க்கணக்கான பணம் தேவை என்ன செய்யலாம் என்று யோசித்தோம் 
   
  இந்த செட்டியார் தெருவில் அதிகமாக 100ற்கு 99சதவீதமானவர்;கள் மலையகத்தை சேர்ந்வர்கள்தான் அதில் அதிகமான முதழாலிமார்களையும் சேர்த்துக் கொள்ளலாம். முதழாலிகளை சந்தித்தோம் முதலில் சென்று கதைத்த போது முதழாலிமார்களே சொன்னார்கள் கடையில் முதழாளி இல்லையென்று ஆனால் நாங்கள் எங்களது முயற்சியை கைவிடவில்லை இரண்டாவது  முறையும் சென்று எங்களது அமைப்பை பற்றி விளக்கி கூறினோம் தொடர்ந்து எங்களது முயற்சியை விடவில்லை இவ்வாறு எங்களது முயற்சியின் பயன் முதலில் பதினைந்து அங்கத்தவர்தான் இணைந்து கொண்டார்கள் பின்னர் இருபது, ஐம்பது, நூறு என்று அங்கத்தவர்களின் எண்ணிக்ககை உயர்ந்நதப்பின் அவர்க்ளிடம் இருந்து இறுநூறு ரூபா வீதம் ஒவ்வொருவரிடமும் பெற்று முதன் முதன் முதலில் ரட்ணபுர இதழ்லன தமிழ் பாடசாலைக்கு சென்று சுமார் ரூபா 35000 பெறுமதியான கற்கை உபகரணங்களை அந்த மாணவர்களுக்காக பெற்றுக் கொடுத்தோம்.

அதன் பின்னர் இந்நிகழ்வு தொடர்பாக  பத்திகைகளில் கட்டுரையொன்றையும் பிரசுரித்தோம் இதேப்போன்று சேவையை செய்ய செய்ய ஊடகங்களுடாக ஒரு பக்கம் விளம்பரங்களும் இடம்பெற்றன என்றுதான் கூறவேண்டும. ஆரம்பத்தில் ஒவ்வொரு கடையாக ஏறிச்சென்று அங்கத்தவர்களை இணைத்து சேவையை செய்து கொண்டே இருந்தோம் எந்த வித காரணங்களுக்காகவும் எங்களது சேவையை இடைநிறுத்த வில்லை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இணைந்து கொண்ட அங்கத்தவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் நடத்துவோம் குறிப்பாக கொழும்பில் இருக்கின்ற  வர்தகர்கள் அனைவயும் இக்கூட்டத்திற்கு அழைத்து நிதிகள் தொடர்பாக பேசித்தீர்மாணித்து பின்னர் பல பாடசாலைகளுக்கு உதவினோம் பல சோதனைகளுக்கு மத்தியில் அதனையெல்லாம் எங்களுக்கு சார்பாக சாதனைகளாக மாற்றிக் கொண்டோம் என்றுதான் சொல்ல வேண்டும.; அவ்வாறு பலரின் கருத்துக்களை உள்வாங்கி கொண்டோம் அதேப்போன்று பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்ற மாணவர்களின் கஸ்டத்தை உணர்ந்தோம் குறிப்பாக பல்கலைக்கழத்திற்கு தெரிவான வயதான மாணவ மாணவிகள் உதவி கேட்க வெட்கப்படுவார்கள் அவ்வாரானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபா வீதம் கொடுத்தாலும் இந்த செட்டித்தெருவில் இருக்கின்ற முதழாலிகளில் யாராவது மூன்று பேர் பொறுப்பெடுத்தாலும் கிட்டத்தட்ட அறுநூறு மாணவர்களுக்கு உதவலாம் என்று அப்படியானவர்களுக்கு இங்குள்ள முதழாலிகளிடம் எடுத்துச் சொன்னோம்  ஒரு முதழாலி மூன்று மாணவர்களுக்கு கல்வி செலவிற்கு உதவினாலும் மூன்று பேருக்கு 3000 ரூபா விகிதம் நிதியை சேர்த்தோம். அந்த வகையில் இதுவரை 147 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதந்தம் 1000 ரூபா வீதம் வழங்கி வருகின்றோம்.

கேள்வி:-  ஆரம்பத்தில் உங்களுடைய நண்பர்களாக இருந்து மன்றத்தை ஆரம்பிப்பதற்கும் வளர்ச்சிக்கும் துனையாக இருந்தவர்கள் யார் என நினைக்கின்றீர்கள்?

பதில்:- உண்மையில் அது ஒரு விரிவான கதை நானும் அதற்கு பின்னால் தலைலராக இருந்த தனராஜ் அவர்களும் தான் இதைப்பற்றி கதைத்தோம் அதில்  தனராஜ் கொழும்பிற்கு வந்துதான் அறிமுகமானவர்  தனராஜ்  மாத்தளையை பிரப்பிடமாக கொண்டவர். நாங்கள் ஞாயிற்று கிழமைகளில் கிரிகட் விளையாட மைதானத்திற்கு செல்வது வழக்கமாக இருந்தது நாங்கள் இருவரும் எங்களது அணியில் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம் அப்போதுதான் அதைப்பற்றிக் கதைத்துக் கொள்வோம். அதேப்போன்று இப்போது மன்றத்தின் பணிப்பாளராக இருக்கின்ற  மோகன்ராஜ் அவர்களையும் சந்தித்துக் கொண்டோம்.  பின்னர் மன்றத்தின் செயற்பாட்டை எவ்வாறு கொண்டுச் செல்வது என்று நினைத்தபோது மோகன் அவர்களுக்கு  நிறைய நண்பர்களை பழக்கமாவராக காணப்பட்டார் காரணம் அவரொரு களைஞர் நாடகத்துறையில் ஆர்வமுள்ளவர்  இதனால் அவருக்கு சற்று போசகர்;களுடன் பழக்கம் இருந்தது எனவே அவர் ஊடாக நாங்கள் பேசுவதற்கு  இலகுவாக இருந்தது எனலாம்.

குறிப்பாக இப்போதய பணிப்பாளராக இருக்கின்ற மோகன்ராஜ் அவர்களின் பங்களிப்பை மலையக கல்வி அபிவிருத்தி மன்ற வரலாற்றில் மிகவும் முக்கியமானது அதேபோல் இப்போது தலைவராக இருக்கின்ற சிவசுப்ரமணியம் அதேபோல் விளையாட்டுத்துறை பொருப்பாளர் சிவக்குமார் ஞானம் போல் ஆகியவர்கள் எல்லாம் உதவிசெய்தவர்கள் இருந்தாலும் பின்னர் இனைந்த இளைஞர்கள் தங்களது குடும்ப சுமை காரணமாக இதை முன்னெடுக்க வரவில்லை அதன்மத்தியிலும் எங்களது ஒற்றுமைதான் இந்த மன்றத்தின் வளர்ச்சிக்கு காரணம் குறிப்பாக சொல்ல போனால் எங்களுக்குள் பதவிப் போட்டிகள் இல்லை. பதவிகள் ஏட்டளவில் இருந்தாலும் நடைமுறையில் எந்த விதப் பாகுபாடுகளும் கிடையாது எங்களுக்குள் அதிகமான விட்டுக் கொடுப்புக்கள் இருக்கின்றது அதுதான் மன்றம் இவ்வாறு வளர்வதற்கு காரணம்.


கேள்வி:-  ஆரம்பத்திலிருந்து மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் இவர்களுக்காகத்தன இந்த தரப்பினர்களுக்காகத்தான் நிதியுதவி வழங்க வேண்டும் அவ்வாறு உதவினால் தான் கல்வியுயர்வை மேம்படுத்தலாம் எனறு எத்தரப்பினறை வைத்துக் கொண்டீர்கள்?

பதில்:- குறிப்பாக 100க்கு 90சதவீதமான தோட்டபாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை செல்வதற்கான அடிப்படை வசிகள் இருப்பது குறைவு அதாவது பாதனிகள் பேனை பென்சில் புத்தகங்கள் வெள்ளைஆடைகள் புத்தகப்பைகள் ஏனையஆடைகள் என அடிப்படை வசதிகள் இருப்பதில்லை அதாவது ஒன்று இருந்தல் இன்னொன்று இருக்காது அப்படியான ஒரு நிலையிலான தோட்டப் பாடசாலையை அடையாளம் கண்டு பார்த்தால் ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்பு மாணவர்களில் 60தொடக்கம் 100 மாணவர்கள் என ஒரு சிறிய தொகையிலான மானவர்கள் தான் இருப்பார்கள்

இவ்வாறு உள்ள பாடசாலை மாணவர்களில் இருப்போர் இல்லாதவர் என்று பார்க்காமல் எல்லோருக்கும்  உதவிகளை வழங்குவோம் காரணம் அவர்களுக்குள்ளும் மனக்கஸ்டங்கள் வரக்கூடாது என்பதற்காகவாகும் இவ்வாரான அடிப்படை வசதிகள் கூட இல்லாத தரப்பினர்களை தெரிவு செயத அவர்களுக்காக உதவுவோம் அதுமட்டுமின்றி கல்வி சார்ந்த எந்தத் துறையாக இருந்தாலும் சரி அவர்களுக்காக உதவி செய்வோம்.


கேள்வி:-  எட்டு ஆண்டுகளாக மலையக கல்விக்காக நிதிகளையுதவிகளை வழங்கி வருகின்ற மன்றம் ஆரம்பக்காலங்களிலிருந்து எத்தரப்பினரை உங்களுடைய நிலையான போசகர்ளாக வைத்துக்கொண்டீர்கள் என சொல்ல முடியுமா?

பதில்:- நிச்சயமாக! செட்டித்தெருவில் இருக்கினற பொபி ஜீவலர்ஸ் அதேப்போன்று அன்னப்புரனா ஹோட்டல் உரிமையாளர்கள் அதேப்போன்று தேவி ஜீவவலர்ஸ் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள்  ரவி ஜீவலர்ஸ் உரிமையாளர் மகேஸ்வரன் அந்த வகையில் பொபி ஜீவலர்ஸின் உரிமையாளர்கான சீதாராமன்ää ராமஜெயம் அவர்களும் அன்னபூரனா ஹோட்டலின் உரிமையாளர் பழனிச்சாமி உண்மையில் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஆரம்ப கூட்டத்தை நடத்துவதற்கு தனது ஹோட்டலின் மேல் அறையை இலவசமாக வழங்கியிருந்தார அரர்களையும் குறிப்பிடலாம்.


கேள்வி:-  மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஆரம்பத்தலைவர் என்ற ரீதியில் மன்றத்தினுடைய எட்டு வருடகால வளர்ச்சியை எவ்வாறு நீங்கள் அடையாளப்படுத்துகின்றீர்கள்?

பதில்:- ஆம் மன்றத்தினுடைய ஆரம்ப அங்கத்தவர்களாக பதினைந்து தெடக்கம் இருபது எண்ணிக்கையை கொண்ட அங்கத்தவர்கள் இருந்தார்கள்  பின்னர் எட்டு வருட காலத்திற்குள் 1600 அங்கத்தவர்களாக அதிகரித்துள்ளதுடன் எங்களது சேவையும் விஸ்தரித்துள்ளது அரம்பக்காலங்களில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஓரு பாடசாலைக்கு செல்வோம் அத்தோடு எங்களது சேவை வரையறுக்கப்பட்டிருந்துது.  இரண்டு வருடங்களின் பின்னர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவி செய்ய தீர்;மாணித்தோம்  அதேப்போன்று இன்றைக்கு வரையில் பல்கலைகழக 150 மலையக மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 1000 வீதம் வழங்கி வருகின்றோம். அதாவது பல்கலைகழகத்திற்கு மேலதிகமாக உள்வாங்கும் மாணவர்களையும் நாங்கள் சேர்த்துக் கொள்வோம் அதாவது இந்த 150 என்கின்ற எண்ணிக்கையிலிருந்து அதிகரிக்குமே தவிர குறையாது. எங்களுடைய நிதி இருப்பை பொருத்து உதவிகளை கொடுப்பதற்கான தொகை அதிகரிக்கும் அதே போல யாராவது எங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று வந்தால் அவர்களையும் இனைத்துக் கொள்வோம்

அதேப்போன்று  ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் மாணவர்களுக்காக இலவச கருத்தரங்குகள்ää புத்தகங்கள் என்பதை குறித்த பாடசாலைகளுக்கு மட்டும் தான் ஆரம்பக் காலங்களில் வழங்கினோம் ஆனால் இன்றைக்கு மலையகத்தில் உள்ள எல்லாப் பாடசாலைகளுக்கும் அந்த உதவி சென்றடைந்திருக்கின்றது இது ஒரு பாரிய வளர்ச்சி எங்களது சேவையில் அதேப் போன்று அடுத்தமாதம் நடைபெறவுள்ள தரம் 11ஆம் மாணவர்களுக்கான கா.போ.த சாதாரணத் தரப் பரிட்சையை முன்னிட்டு குறிப்பாக மலையகத்திலுள்ள பாடசாலைகள் அனைத்துக்குமாக அன்னலவாக ஒனபது லட்சம் ரூபா பெருமதியான பரிட்சை வினாத்தாள்களை தகுதியான ஆசிரியர்களை கொண்டு செயலமர்வுகளை நடத்தினோம் அதுமட்டுமள்ளாது  விசேட ஆற்றல் கொண்டவர்களுக்கு உதவிகளை வழங்குவோம் குறிப்பாக விளையாட்டு துறைகளில் விசேடதிறன்களை கொண்டவர்களுக்கு. அதாவது எந்தத்துறையிலாவது விசேட திறமைகளை பெற்றவர்கள் அவர்கள் அடுத்த நிலைக்கு செல்வதற்கு  பணம் ஒரு தடையாக இருக்கமானால் நாங்கள் உதவுவதற்கு முன்வருவோம். அண்மையில் கூட விஞ்ஞான கண்காட்சி ஒன்றிற்காக ஒரு மாணவனுக்கு இந்தோனேசியா செல்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் வறுமை காரணமாக செல்ல முடியவில்லை. அம்மாணவனை மனறத்தின் உதவியுடன் அவரை இந்தோநேசியாவிற்கு அனுப்பி வைத்தோம் எனவே இவ்வாரான செயற்பாட்டினை மன்றத்தினுடைய வளர்சியின் படிகளாக முன் வைக்கலாம் என நினைக்கின்றேன்.


கேள்வி:-  கடந்த எட்டு வருட காலமாக மலையகத்திலுள்ள மானவர்களுக்காக அடிப்படை கல்விசார் உதவிகள் அல்லது நிதியுதவிகளை வழங்கி வருகின்ற நீங்கள் உதவி பெற்றவர்களின் உயர் நிலையை எவ்வாறு அடையாளப்படுத்துகின்றீர்கள்?

பதில்:- அதாவது இவ்வாறு உதவி பெற்று வருபவர்களின் கல்வியில் பாரிய தேர்ச்சிகளை காண கூடியதாக உள்ளது. இதற்கு சாண்றாக நான்  புள்ளி விபரங்களை தருவதை விட அண்மைக்காலங்களில் தரம் ஐந்து புலமை பரிட்சையில் அதிகமானோர் சித்தியடைகின்றார்கள் முன்பெல்லாம் மாகாணம் அல்லது மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவில்தான் மாணவர்கள் சித்தியடைந்தார்கள் ஆனால் தற்போதைய காலங்களில் கணிசமான அளவு ஐந்தாம் ஆண்டு புலமைபரிட்சையில் மாணவர்கள் சித்தியடைவதை பார்க்க கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன வென்று பார்த்தால் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் புலமை சங்கம் என்ற நூலை அச்சிட்டு எல்லோருக்கும் இலவசமாக விநியோகித்தது அதுமட்டுமள்ளாது அவர்களுக்கான பரிட்சை வினாத்தாள்களை தயாரித்து அதிகமான மாலையக பாடசாலைகளுக்கு கொடுத்தோம் அதன்பயனாக அதிக புள்ளிகளை மாணவர்களால் பெற்று கொள்ள முடிந்தது. இதனை நாங்கள் அனுப்பி வைத்த பரிட்சை வினாத்தாள்களும் புத்தகங்களையும் மூலமாகத்தான் என்று பாடசாலைகளிலிருந்து எங்களுக்கு அனுப்பி வைத்த கடிதங்களை மூலம் அறியமுடிகிறது இதனை சாண்றாக குறிபிடலாம்.

கேள்வி:- மன்றத்தினுடைய உதவிகளை பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் எநத நிலையில் இருக்கின்றார்கள் என்பதோடு அவர்கள் மன்றத்திற்கு எவ்வாரான பங்களிப்பை வழங்குகின்றார்கள்?

பதில்:- ஆம் அவர்களுக்கு உதவிகளை வழங்கும் போது சொல்வது ஒன்ரே ஒன்றுதான் மலையகத்தை சேர்ந்ததனால் இதனை நாங்கள் தருகின்றோம் நீங்கள் ஏதாவது எங்களுக்கு நன்றிக்கடன் செய்வதாக நினைத்தால் இந்நிதியினை சரியான முறையில் பயன்படுத்துங்கள் காரணம் இது கொழும்பில் வேலைப்பார்க்கின்ற மலைகத்தை சேர்ந்த கடும் உழைப்பாளிகளின் பணம் என்பதனால் அதேபோல பல்கலைகழகத்துக்கு சென்று படித்தவர்களில் அதிகமானோர் இன்று நல்ல தொழில்களை செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதில் அதிகமானவர்கள் ஆசிரியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் குறிப்பாக வைத்தியராக ஒருவரும் இருக்கின்றார் இவ்வாறு அதிகமானோர் உதவிகளை பெற்று இருக்கின்றார்கள் அதில் குறிப்பிட்ட சிலர் இன்றும் எங்கலோடு இணைந்திருக்கின்றார்கள் அவர்கள் அதிகமான சேவைகளை மன்றத்திற்கு வழங்குகின்றார்கள்.


கேள்வி:-  இன்று தமிழ் ஊடகங்களின் ஆதரவினை பெற்றுள்ள மன்றம் அரசியல் வாதிகளின் பங்களிப்புகள்ää ஆதரவுகள் பக்கம் எவ்வர்று இறுக்கின்றது? குறிப்பாக மலையக அரசியல் வாதிகளிடமிருந்து? 

பதில் :- குறிப்பாக மன்றத்தினுடைய வெற்றிக்கு காரணம் மதம்ää அரசியலுக்கு அப்பாற்பட்டது இப்படி ஒரு வேறுபாடு இல்லாததன் காரணமாகத்தான் எங்களை நம்பி அதிகமான அங்கத்தவர்கள் இனைந்துள்ளார்கள். ஆரம்பத்திலிருந்து எங்களுடைய ஒரு கொள்கையாகவே இருந்தது மதம் அரசியலுக்கு அப்பாட்பட்டு செயற்ப்ட வேண்டும் என்ற கொள்கையில் நெறிப்பிரலாமல் செயற்படுகிறோம். இதன் பின்பு அதிகமான அரசில் வாதிகளுடைய தொடர்புகள் இருக்கின்றது அவர்களும் எங்களுடைய கூட்டங்களுக்கு  வருவார்கள் அதில் அவர்கள் என்னதான்; அரசியல்வாதிகளாக  இருந்தாலும் எங்கள் மன்றத்திற்கு வரும் பொழுது ஒரு சமூக சேவையாளர்களாகதான் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். சில அரசியல் வாதிகளே சொன்னார்கள் நீங்கள் எந்த வித அரசியல் இல்லாமல் செயற் படுகின்றீர்கள் என்று ஒரு சில நேரம் மன்றத்தின் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தம் போது அவர்களின் உதவி தேவைப்படுகிறது. நாங்களே பல முறை சொல்லி இருக்கின்றோம் நாங்கள் அரசியலுக்குள் வரவில்லை நாங்கள் மலையக கல்விக்காக செயற்படுகின்றோம் இருந்தாலும் அரசியலுக்கு அப்பால் சிலர் மன்றத்திற்காக உதவிகளை செய்கின்றார்கள். உண்மையில் அரசியல் வாதிகளுடைய பாதை வேறு எங்களுடைய பாதை வேறு ஆனால் அவர்களின் கூட்டங்களில் தனிப்பட்ட ரீதியில் கலந்து கொள்வோம் அவர்களும் எங்களது கூட்டங்களுக்கு  அவர்களது பதவிகளுக்கு அப்பால் பொதுச்சேவர்களாக கலந்து கொள்வார்கள.; இவ்வாறு என்னதான் இருந்தாலும் இவ்வளவு காலமும் அவர்களும் நாங்களும் ஒன்றாக இனையாமல் இருப்பதுதான் மன்றத்தின் வளர்சிக்கு காரணம் என நினைக்கின்றேன்.

   

கேள்வி:-  மலையகத்தில்  உங்கள் மன்றத்தின் சேவைக்கு அப்பால் மலையகத்தின் கல்வி நிலையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- ஆம் இப்போதுதான் மிகவும் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள் நான் என்னுடைய அனுபவத்தில் கூறுவதானால் மலையகத்திலுள்ள மாணவர்களின் கல்வி நிலை உயர வேண்டும் என்றால் பெற்றோர்களுக்கு சரியான விழிப்புனர்வுகளை ஏற்படுத்த வேண்டும். தோடட்ப்புறங்களில் வேளைசெய்கின்ற பெற்றோர்களுக்கு வருமானம் குறைவு என்பது உண்மைதான் ஆனால் வளங்கள் என்பது அதிகமாகத்தான் இருக்கின்றது. குறிப்பாக மலையகத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களுக்குள்ள வழங்களைப் பயன்னடுத்தி பசுமாடுகளை வளர்க்கலாம் தோடட்பயிர் செய்கைகளை மேற் கொள்ளலாம். அதாவது ஒரு நாளில் ஒரு குறிபிட்ட நேரம்தான் தோட்ட வேளைகளை செய்கின்றார்கள் பின்னர் அவர்களுக்கு இருக்கின்ற பகுதி நேரங்களில் இவ்வாரான முயற்சிகளில் ஈடுபட்டு முன்னேறுவதற்கான ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கின்றார்கள்.  கிடைக்கின்ற வருமானத்தை வைத்து திட்மிட்டு செலவு செய்யத் தெரியாமல் அனாவசிய செலவுகளை மேற்க்கொள்கின்றார்கள்.

நாங்கள் அநேகமான தோட்டப் புரங்களக்கு செல்வோம் அங்குபார்த்தால் 90 சதவீதமானவர்கள் மது பலக்கத்திற்கு அடிமையானவர்களாக இருக்கின்றார்கள் இவ்வாறு மாதத்திற்கு 200 ரூபா வீதம் அவர் அதற்காக  செலவிடுகின்றார் ஆனால் பெற்றோர்pனால் பிள்ளைகளுக்கு நல்ல ஒருஆடையை 300ருபா கொடுத்து பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அதேப்போன்று மலையக பகுதிகளில் பார்த்தால் பாதை வசதிகள் ஓழுங்கீனமாகத்தன் இருக்கும் அங்குள்ள பாடசாலை மாணவர்களுக்கு  பாதனிகள் கூட இருக்காது இவ்வாறுள்ள மாணவர்களுக்கு வீட்டு வேளைகளில் காணப்படுகின்ற சுமைக்காரணமாக மாணவிகள் பாதிக்கப்படைகின்றார்கள். அவர்களுக்கு போசாக்கான உணவுகள் கிடைப்பதில்லை நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்களுக்கு காலை உணவு கிடையாது. அதேபோல் மலையகத்திலுள்ள சிலப்பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் கவணம் செலுத்துகின்றார்கள். அதேப்போன்று மலையகத்தின் கல்வி அங்குள்ள ஆசிரியர்களின் கையிலும் தங்கியிருக்கின்றது. எந்த இடங்களில் மலையக ஆசிரியர்கள் முழு முயற்சியாக  செயற்படுகின்றார்களோ அங்குள்ள மாணவர்கள் முழு பெருபேயர்களை பெற்றுக் கொள்கின்றார்கள் என்பதுதான் உண்மையாகும் இங்கு ஆசிரியர்களின் கையிலும் மலையக எதிர்காலம் தங்கியுள்ளது. அரசியல் காரணமாக தகுதியற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் இடம்பெறுவதும் மலையக கல்வியில் பாரிய வீழ்ச்சியாகும். ஆனால் ஆசிரியர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்கலாம் இதற்கு உதாரணமாக

                                                    எட்டியாந் தோட்டை நிக்கலாஸ் என்கின்ற தோட்த்தில் பழைய பாடசாலையொன்று கைவிடப்பட்ட நிலையில் இருந்தது இருந்து போதும் அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் எல்லாம் ஒன்று சேர்;ந்து அப்பாடசாலையை புதிதாக கட்டியமைத்தார்கள். இதற்காக மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஒன்றரை லட்சம் ரூபா நிதியினை வழங்கியது. ஆனால் அப்பாடசாலை ஆசிரியர்களின் முயற்சியோடு செயற்பட்டதன் காரணமாக இப்போது தான் முதன்முதலாக  ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 12 மாணவர்கள் தோற்றிய பாடசாலையில் 5 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்; மற்றைய ஆறு மாணவர்களும் நூறுக்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்றுள்ளனர் இவ்வாறு அவ்வாரானதொரு பாடசாலை ஆசிரியர்களால் பல மாணவர்களை சித்தியடைய வைக்க இயலும் மென்றால் ஏன் சகல வளங்களையும் கொண்ட மற்றைய மலையக பாடசாலைகளின் ஆசிரியர்களால் முடியாமலிருக்கிறது.

கேள்வி:- மலையக அரசியல் கலாசாரத்திற்கு அப்பால் மலையகத்தில்  மன்றத்தின் செயற்படுகள் எவ்வாறு இருக்கின்றது?

பதில்:- உண்மையில் மன்றத்தினுடைய பாதை வேறு அரசியல் வாதிகளுடைய கொள்கை வேறு அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகள் எங்களுக்கு இடையுராக இருந்ததும் இல்லை அதேப்போன்றுதான் நாங்களும் ஆனால் மன்றத்திற்கு அப்பால் ஒரு தனிநபராக நான் பார்க்கும் பொழுது மலையக மக்களுக்கு அரசியல் வாதிகளின் சேவை மிகவும் குறைவாகத்தான் இருக்கின்றது. மற்றைய சமுகங்களோடு பார்க்கும் போது எங்களுடைய சமுகம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. கிட்ட தட்ட 200 வருட வரவாற்றைக் கொண்ட நாங்கள் எவ்வளவோ முன்னேற்றத்தை அடைந்திருக்க வேண்டும் ஆனால் அரசியல் வாதிகள் சரியான இடங்களில் சரியான முடிவுகளை எடுத்து மக்களுக்கு சேவைகளை வழங்கி இருந்தால் எங்களுடைய நிலமை இன்று இவ்வாரு இருக்காது அரசியல் வாதிகள் விட்ட சில வரலாற்று தவறுகள் காரணமாக இன்று நாங்கள் பின்னடைவை சந்தித்துள்ளோம்.


கேள்வி:- மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் செட்டியார் தெருவில் இருக்கின்ற போசகர்களுக்கு அப்பால் பொருளாதார ரீதியில் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில்:-உண்மையில் இன்று சமுக வளைத்தளங்கள் எங்களுக்கு பாரிய உதவியாக இருக்கின்றன அதாவது மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் முகப்புத்தகத்தின் நண்பர்கள் 5000 ஆகும் இதநூடாக நாங்கள் செய்கின்ற சேவைகளோடு தொடர்புடைய புகைப்படங்கள் அத்தோடு மன்றத்தினுடைய வருடாந்நத வரவு செலவுத்திட்ட விபரங்களை எல்லாம் பதியக்கூடியாக இருக்கின்றது. இதநூடாக எங்களுடைய அங்கத்தவர்களுக்கும் வெளிநாடுகளிலுள்ள நண்பர்களுக்கம் மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்களை கொடுக்க கூடியதாக உள்ளது. அத்தோடு எங்களுடைய இணையத்தளம் அறிவொளி டொட் கொம் வெளிநாடுகளில் இருக்கும் அமைப்புகளோடு தொடர்புகொள்ள கூடியதாக உள்ளது. இவ்வாறான முறைமைகள் முலம் அதனது பொருளாதார இருப்பை அதிகரித்துக் கொள்ள கூடியதாக இருக்கின்றது.


கேள்வி:- 1600 அங்கத்தவர்களைக் கொண்டுள்ள நீங்கள் இவர்களுக்கு உங்களது மன்றத்தின் நிதியியல் தொடர்பாக எவ்வாறான அறிக்கைகளை வெளியிடுகின்றீர்கள்?

பதில்:- ஆம் வருட இருதியில் நாங்கள் வருடார்நத கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து கூடட்த்தில் வருகை தந்திருக்கின்ற அங்கத்தவர்களிடம் வரவு செலவுத் திட்ட விபரங்களை வெளியிடுவோம். இவ்விபரங்களை எங்களது அறிவொளி டொட்கொம் இணையத்தளத்திநூடாகவும் வெளியிடுவோம் இக் கூட்டத்தில் வரவு  செலவு விபரங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்குமிடத்து சரியான விபரங்களை வழங்குவோம். என்னைப்பொருதத் வரையில் மன்றத்தின் எல்லா விடயங்களும் ஒரு திறந்த புத்தகமாக இருக்கும். இதில் வரவுக்கு மிஞ்சிய செலவுதான் இருக்குமே தவிர பெருந்தொகையான நிதி மிகைப்படுவது கிடையாது கிடைக்கின்ற பணத்தை அப்படியே மக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன இதனால் பிரச்சினைகள் வருவது குறைவாகும்.

Thursday 14 November 2013




பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையும், இலங்கையின் முன்னனி இரத்தினக்கல் நிறுவனங்களின் உரிமையாளர் சங்கமும் இனைந்து நேற்று"இரத்தினங்கல் மற்றும் ஆபரணங்கள்" (Gem and jewellry exhibition) என்ற தொனிப்பொருளில் கண்காட்சி நிகழ்வொண்ரை காலை 11 மணியளவில் த கிங்ஸ் பெரி ​ேஹாட்டலில் ஜனாதிபதியின் பாரியார் திருமதி சிராந்தி ராஜபக்க்ஷ அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது இக் கண்காட்சியில் இலங்கையின் பெறுமதி வாய்ந்த star of lanka மற்றும் Ray of Treasare ஆகிய கற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன
























Saturday 5 October 2013

கல்லுாரி நாள்.

 2013.09.30


இலங்கை இதழியல் கல்லுரி 2013.09.30ஆம் திகதியிலிருந்து தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைத்துள்ளது  இந் நாளை சிறப் பிக்கும் முகமாக 2013 ஆண்டின் கல்லுரி மாணவர்கள் பல விளையாட்டு நிகழ்வுகளை நாராஹன் பிடியவில் அமைந்துள்ள மைதானத்தில் கொண்டாடினர்.